google-site-verification=FJPfEEIf9XsbSqQQ_mcBzkBG4ft8J0yH0KbnWakXpi8 அறிகை: 2020

நவீனம் நோக்கிய ஆரம்பக்கல்விக்கு அறிகையுடன் இணைந்திருங்கள்.**புலமைப்பரிசில் பரீட்சைக்கான நிகழ்நிலை வழிப்படுத்தல்கள்.** தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து.

வியாழன், 21 மே, 2020

வளிக்கு நிறை உண்டு


சமநிலையிலுள்ள மரச்சட்டங்களால் ஆக்கப்பட்ட அமைப்பில் காற்று நிரப்பிய பலூன் ஒன்றையும் மறுபுறம் காற்று நிரப்பாத பலூனையும் கட்டிவிட்டு அவதானிக்கும்போது. காற்று நிரப்பிய பலூன் கீழ்நோக்கியும் நிரப்பாத பலூன் மேல்நோக்கியும் காணப்படும்.

தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை - 28

புதன், 20 மே, 2020

கொங்காலேகொட பண்டா (தரம் 5 ஆசிரியர் பொது வழிகாட்டி)






இலங்கை சுதந்திரப் போராட்டத்தின் பிரதான தளபதி ஆகிய கொங்காலே கொட பண்டாவின் இயற்பெயர் தாவீது.

அதாவது டேவிட் என்பதாகும், அலுதெனிய பண்டா, கப்புறுபஸ்தி, பண்டளாகே டேவிட், தொன்புள்ளேவெதராளை ஆகிய பெயர்களாலும் இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

கிபி 1843 அளவில் இவர் பதுளை பிரதேசத்தில் வாழ்ந்துள்ளார் தேசப்பற்றுள்ள தைரியம் மிக்க சிங்கள மக்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயற்பட்டார் எனவே இவர் ஒரு தேசத் துரோகி என ஆங்கிலேய அரசு பிரகடனப்படுத்தியது தாம் ராஜசிங்கனின் குடும்ப உறவுமுறை க்காரன் எனக்கூறி கண்டி தலதா மாளிகையில் வாசித்துள்ளார். வெளிநாட்டவரின் ஆட்சிக்கு எதிராகசெயற்படும்போது அதற்குத் தேவையான பொதுமக்களின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெறுவது முக்கியமானது என்பதை அவர் விளங்கிக் கொண்டார். ஆங்கிலேயரால் அறறவிடப்பட்ட நியாயமற்ற வரிகளை இரத்துச் செய்து கொள்ள வேண்டிய தேவை சிங்கள மக்களுக்கு இருந்தது மேலும் ஆங்கில ஆட்சியாளரை இலங்கையிலிருந்து துரத்துவதற்கு சிங்கள மக்கள் ஒன்று திரள வேண்டும் என்பதையும் அவர் விளங்கி இருந்தார். அப்போராட்டத்தில் தலைவராக கொங்காலே கொட பண்டா செயற்பட்டார் 1848 ஜூலை மாதம் 30ஆம் திகதியன்று பெருந்தொகையானோரின் விருப்பமும் விகாராதிபதி ஆகிய வணக்கத்துக்குரிய கிரானேகம இந்திரஜோதி அவர்களின் அனுசரணையும் கிடைத்தது கௌரவ மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் கொங்காலே கொட பண்டா ஸ்ரீ விக்ரம் சர்வ சித்தி எனும் பெயரில் மூன்று பிரதேசங்களுக்கும் அரசனாக முடிசூட்டி அபிஷேகம் செய்யப்பட்டார் கண்டி பரந்துகலை மற்றும் மாத்தளை நகரங்களை வெற்றி கொண்ட நிலையில் சிங்களப் போராட்ட தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட விளைவுகள் மற்றும் சிங்களவரின் போர் ஆயுத சக்தி குறைபாடு போன்றவை காரணமாக போராட்டம் களை இழந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள் ஒளிந்திருந்த கொங்காலே கொட பண்டா வை 1848 நவம்பர் பதினான்காம் திகதி யுத்த நீதிமன்றத்தில் நிறுத்தினர் அங்கு வெளியிட்ட குற்ற ஒப்புதல் வழக்கு காரணமாக மரண தண்டனை தளர்த்தப்பட்டு 100 கசையடிகள் ஆக மாற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டது கொங்காலே கொட பண்டா 1849 சனவரி முதலாம் திகதி உயிர் நீத்தார் கண்டியில் அபிஷேகம் செய்யப்பட்ட மன்னன் எனவும் 1848 இல் விடுதலைப் போராட்டத்தை ஒழுங்கு செய்து பொதுமக்களின் ஊடாக அதற்கு ஊட்டி வலுவூட்டி நடத்திய ஒரு வீரர் எனவும் இலங்கை வரலாற்றில் இவரது பெயர் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது.

செவ்வாய், 12 மே, 2020

தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை - 22

கலாநிதி ஆனந்தக்குமாரசுவாமி.


கலாநிதி ஆனந்தக்குமாரசுவாமி அவர்கள் 1877இல் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பிறந்தவர்.

500இற்கும் மேற்பட்ட தரமான நூல்களை வெளியிட்டுள்ளார்.

ஆங்கிலம், தமிழ், பிரஞ்ச், ஜெர்மன், லத்தின், கிரேக்கம், சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.

சிறந்த சட்ட அறிஞராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார்.

இந்து சமய நூல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார். 

பௌத்த சமய நூல்களை பாளி மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார்.

இலங்கை நாடு உலகுக்கு அளித்த சிறந்த தத்துவ ஞானியாக இவர் விளங்குகின்றார்.

இவரது ஆக்கங்கள் கையெழுத்து பிரதிகள் அமெரிக்காவின் போஸ்டன் லலித கலைகள் அரும்பொருட்காட்சிச் சாலையில் இன்றும் உள்ளன.

இவர் 1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் காலமானர்.

ஞாயிறு, 10 மே, 2020

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள்.


சுவாமி விபுலானந்த அடிகள் இலங்கையின் மட்டக்களப்பிலுள்ள காரைதீவு எனும் ஊரிலே சாமித்தம்பியாருக்கும்  கண்ணம்மையாருக்கும்  மகனாக 1892 . 3. 27 ஆம் திகதி பிறந்தார். பெற்றோர் இவருக்கு மயில்வாகனன் என்று பெயரிட்டனர். இவர் தமது ஆரம்பக் கல்வியை கல்முனை மெதடிஸ்ட் ஆங்கில பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியிலும் கற்றார் இக் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் பௌர்ணமி அன்று இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்த விபுலானந்த அடிகளார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக விளங்கினார். அப்பணியில் நீண்டகாலம் தொடராமல் தமிழ் இசை ஆய்வில் ஈடுபட்டு யாழ்நூல் எனப்படும் சிறந்த இசைத்தமிழ் நூலை 1947இல் வெளியிட்டார்.   19. 0 7. 1947இல் இம் மண்ணுலகை விட்டுப் பிரிந்தார் சிவானந்த வித்தியாலயத்தில் இவரது சமாதி இன்றும் உள்ளது. 

பரமார்த்த குரு கதைகள்.



சனி, 9 மே, 2020

தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை - 20


இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னம் சிகிரியா.


இலங்கையின் மத்திய பகுதியில் கண்டி நகருக்கு 72 km வட கிழக்கே மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது.கி.பி 5 ம் நூற்றாண்டில் காசியப்பன் எனும் மன்னன் (கி.பி 473-491) இக் குன்றின் மீது மிகப் பெரிய அரண்மனையை கட்டி இதனை தன் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்தான்.
                   இச் சிகிரியா குகையினுள் சுவரோவியங்கள் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்னும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றது. இந்த ஒவியங்களில் காணப்படும் பெண்களை தேவதைகள் என சிலரும், காசியப்பனின் மனைவிகள் என சிலரும் குறிப்பிடுகிறார்கள். சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர்க்கொத்தை ஏந்தியவாறும், சிலர் மேலாடை இன்றியும், சிலர் மேலாடையுடனும், தனித்தும், கூட்டமாகவும் இருக்குமாறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இதன் வடிவமைப்பானது தூரத்தில் இருந்து நோக்கும் பொழுது சிங்கம் ஒன்று படுத்திருப்பது போல காட்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளமையானது, பார்ப்பவர்களை பிரம்மிப்பூட்டுகிறது. இதனை 'சிங்க குகை' என்றும் அழைக்கும் வழக்கம் மக்களிடையே காணப்படுகின்றது.

மலைக்குன்றின் வெளிப்பகுதியில் மட்டுமல்லாது, உட்கட்டமைப்புக்களும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். உட்பகுதியில் காணப்படுகின்ற செதுக்கல் மற்றும் சித்திர வேலைப்பாடுகள் பார்வையாளர்களை வசீகரிக்கும் விதத்தில் உள்ளன. பிரதானமாக சுவரோவியங்கள் தனி இடத்தை பிடிக்கின்றன. இவ்வோவியங்கள் 'அஜந்தா' வகையை சார்ந்தனவாகவும், இன்று வரை மங்காத நிலையில் காணப்படுகின்றமையும் அக்கால கலையின் திறனை பறைசாட்டுகின்றன.

இத்தகைய கலையம்சமும் சிறப்பம்சமும் பொருந்திய சிகிரியா மலைக்குன்றினை காண வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. முக்கியமாக சென்று பார்வையிடும் இடங்களில் சிகிரியாவும் பிரதான இடத்தைப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெள்ளி, 8 மே, 2020

காற்றுத் திசைகாட்டி, காற்று வேகமானி.,வெப்பமானி


காற்றின் வேகத்தை அளவிட காற்றுவேகமானிகள் பயன்படுகின்றன.சுழலும் கிண்ண அமைப்புக் கொண்ட காற்றுவேகமானிகளே பொதுவாகப் பயன்படுகின்றன.


காற்றுத் திசைகாட்டி
காற்றின் திசை காற்றுத்திசைகாட்டி மூலம் அறியப்படும். காற்று வீசும் திசையை அறிய காற்றுத் திசை காட்டிகள் பயன்படுகின்றன.

                                         வெப்பமானி







                        டிஜிற்றல் வெப்பமானி                           









பாதரச வெப்பமானி 







வெப்பமானி (Thermometer) என்பது பல்வேறு வகையான கொள்கைகளின் அடிப்படையில் வெப்பநிலை அல்லது வெப்பநிலை வேறுபாட்டை அளவிடும் ஒரு கருவி ஆகும்.


தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 19


வியாழன், 7 மே, 2020

மரச்செதுக்கலின் பொக்கிசம் எம்பக்க தேவாலயம்.


கி.பி. 1370 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கையின் கம்பளை இராச்சியத்தை ஆட்சி செய்த  மூன்றாம் விக்கிரபாகு மன்னன் எம்பக்க என்ற இடத்தில் மக்கள் கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு செய்வதை கண்ணுற்று அங்கு ஒரு தேவாலயத்தை அமைக்க நன்கொடை வழங்கி ஆலயத்தை அமைத்துள்ளார்.
இலங்கையிலேயே அதி உன்னதமான மரவேலைப்பாடுகள் கொண்டது எம்பக்க தேவாலயம். தமிழ் கடவுளின் வழிபாட்டுத்தமான இவ் ஆலயம்  வியக்கவைக்கும் கலைப்பண்புகளுடனும் பல வேலைப்பாடுகளுடனும்  கட்டப்பட்டுள்ளது.

கோயிலின் பிரதான மண்டபம் விசாலமாகவும் மேள வாத்தியம் இசைக்கவும் ஆடிப் பாடவும் ஏற்ற விதத்தில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.
எந்த விதமான இரும்பு ஆணி வகைகளும் பாவிக்கப்படாமல் முற்றிலும் மரத்தாலான வேலைப்பாடுகள் மட்டுமே கொண்டு முழுக் கூரையும் அமைக்கப்பட்டுள்ளமை, ஏறக்குறைய இங்குள்ள தூண்களில் 600க்கும் மேற்பட்ட மரவேலைப்பாட்டு அலங்கார ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பை அதிகமாக்கியுள்ளது.
இப்படி அமையப்பெற்ற தேவாலயம் காலப்போக்கில் இந்துக்களின் அடையாளத்தை முழுமையாக இழந்து பௌத்தர்களின் புனித தலமாக மாற்றம்பெற்றது. பௌத்தர்கள் மத்தியில் இத் தலத்திற்கென ஒரு தனி சிறப்பு உள்ளது. இந்து கடவுள் என்ற போதும் இவ் ஆலயம் இன்று சிங்களவர்கள் வழிபடும் விகாரையாக மாறியுள்ளது.

இலங்கையின் ஆறுகள் உற்பத்தியாகும், கடலுடன் கலக்கும் இடங்கள்.

தரம் - 5 பரிசோதனைகள் (எரிதலுக்கு வளி அவசியம்.)



தேவையான பொருட்கள்- மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கண்ணாடிப் போத்தல்.

எரியும் மெழுகுவர்த்தியை கண்ணாடிப் போத்தலால் மூடுதல்.

சிறிதுநேரத்தில் மெழுகுவர்த்தி அணையும். 



புதன், 6 மே, 2020

தரம் 4 செயலட்டைகள் (வடமாகாணம்)


தரம் 3 செயலட்டைகள் (வடமாகாணம்)


நேரம் சரியாக


வகுப்பறைச் சாரல்கள்.


நுட்பவியல் கலைச் சொற்கள்.

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :
 WhatsApp - புலனம்
 youtube - வலையொளி
 Instagram - படவரி
 WeChat - அளாவி
 Messanger - பற்றியம்
Twtter - கீச்சகம்
 Telegram - தொலைவரி
 skype - காயலை
Bluetooth - ஊடலை
 WiFi - அருகலை
 Hotspot - பகிரலை
 Broadband - ஆலலை
 Online - இயங்கலை
 Offline - முடக்கலை
 Thumbdrive - விரலி
 Hard disk - வன்தட்டு
 GPS - தடங்காட்டி
 cctv - மறைகாணி
 OCR - எழுத்துணரி
 LED - ஒளிர்விமுனை
 3D - முத்திரட்சி
 2D - இருதிரட்சி
 Projector - ஒளிவீச்சி
 printer - அச்சுப்பொறி
 scanner - வருடி
 smart phone - திறன்பேசி
 Simcard - செறிவட்டை
 Charger - மின்னூக்கி
 Digital - எண்மின்
 Cyber - மின்வெளி
 Router - திசைவி
 Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு
 Thumbnail சிறுபடம்
 Meme - போன்மி
 Print Screen - திரைப் பிடிப்பு
 Inkjet - மைவீச்சு
 Laser - சீரொளி

தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 18


இலங்கைக்கே உரித்தான மீன்கள்.

புள்ளித்தோட்டி
அழகிய சொர்க்கம்
சேல்கெண்டை
கோழிக்கெண்டை

செவ்வாய், 5 மே, 2020

வித்து முளைத்தலுக்கு அவசியமான காரணிகளை அறிதல்.






எளிய மின்சுற்று




மிஸ்டர் முன்சாமி



தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 17


திங்கள், 4 மே, 2020

தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 16


தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 15


தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 14


தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 13


தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 12


தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 11


தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 10


தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 9


தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 8


தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 7


தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 6


தரம் 5 நிகழ்நிலைப் பரீட்சை 5