சுவாமி விபுலானந்த அடிகள் இலங்கையின் மட்டக்களப்பிலுள்ள காரைதீவு எனும் ஊரிலே சாமித்தம்பியாருக்கும் கண்ணம்மையாருக்கும் மகனாக 1892 . 3. 27 ஆம் திகதி பிறந்தார். பெற்றோர் இவருக்கு மயில்வாகனன் என்று பெயரிட்டனர். இவர் தமது ஆரம்பக் கல்வியை கல்முனை மெதடிஸ்ட் ஆங்கில பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியிலும் கற்றார் இக் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் பௌர்ணமி அன்று இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்த விபுலானந்த அடிகளார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக விளங்கினார். அப்பணியில் நீண்டகாலம் தொடராமல் தமிழ் இசை ஆய்வில் ஈடுபட்டு யாழ்நூல் எனப்படும் சிறந்த இசைத்தமிழ் நூலை 1947இல் வெளியிட்டார். 19. 0 7. 1947இல் இம் மண்ணுலகை விட்டுப் பிரிந்தார் சிவானந்த வித்தியாலயத்தில் இவரது சமாதி இன்றும் உள்ளது.
ஞாயிறு, 10 மே, 2020
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள்.

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக