google-site-verification=FJPfEEIf9XsbSqQQ_mcBzkBG4ft8J0yH0KbnWakXpi8 அறிகை: மரச்செதுக்கலின் பொக்கிசம் எம்பக்க தேவாலயம்.

நவீனம் நோக்கிய ஆரம்பக்கல்விக்கு அறிகையுடன் இணைந்திருங்கள்.**புலமைப்பரிசில் பரீட்சைக்கான நிகழ்நிலை வழிப்படுத்தல்கள்.** தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து.

வியாழன், 7 மே, 2020

மரச்செதுக்கலின் பொக்கிசம் எம்பக்க தேவாலயம்.


கி.பி. 1370 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கையின் கம்பளை இராச்சியத்தை ஆட்சி செய்த  மூன்றாம் விக்கிரபாகு மன்னன் எம்பக்க என்ற இடத்தில் மக்கள் கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு செய்வதை கண்ணுற்று அங்கு ஒரு தேவாலயத்தை அமைக்க நன்கொடை வழங்கி ஆலயத்தை அமைத்துள்ளார்.
இலங்கையிலேயே அதி உன்னதமான மரவேலைப்பாடுகள் கொண்டது எம்பக்க தேவாலயம். தமிழ் கடவுளின் வழிபாட்டுத்தமான இவ் ஆலயம்  வியக்கவைக்கும் கலைப்பண்புகளுடனும் பல வேலைப்பாடுகளுடனும்  கட்டப்பட்டுள்ளது.

கோயிலின் பிரதான மண்டபம் விசாலமாகவும் மேள வாத்தியம் இசைக்கவும் ஆடிப் பாடவும் ஏற்ற விதத்தில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.
எந்த விதமான இரும்பு ஆணி வகைகளும் பாவிக்கப்படாமல் முற்றிலும் மரத்தாலான வேலைப்பாடுகள் மட்டுமே கொண்டு முழுக் கூரையும் அமைக்கப்பட்டுள்ளமை, ஏறக்குறைய இங்குள்ள தூண்களில் 600க்கும் மேற்பட்ட மரவேலைப்பாட்டு அலங்கார ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பை அதிகமாக்கியுள்ளது.
இப்படி அமையப்பெற்ற தேவாலயம் காலப்போக்கில் இந்துக்களின் அடையாளத்தை முழுமையாக இழந்து பௌத்தர்களின் புனித தலமாக மாற்றம்பெற்றது. பௌத்தர்கள் மத்தியில் இத் தலத்திற்கென ஒரு தனி சிறப்பு உள்ளது. இந்து கடவுள் என்ற போதும் இவ் ஆலயம் இன்று சிங்களவர்கள் வழிபடும் விகாரையாக மாறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக