இலங்கை சுதந்திரப் போராட்டத்தின் பிரதான தளபதி ஆகிய கொங்காலே கொட பண்டாவின் இயற்பெயர் தாவீது.
அதாவது டேவிட் என்பதாகும், அலுதெனிய பண்டா, கப்புறுபஸ்தி, பண்டளாகே டேவிட், தொன்புள்ளேவெதராளை ஆகிய பெயர்களாலும் இவர் அழைக்கப்பட்டுள்ளார்.
கிபி 1843 அளவில் இவர் பதுளை பிரதேசத்தில் வாழ்ந்துள்ளார் தேசப்பற்றுள்ள தைரியம் மிக்க சிங்கள மக்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயற்பட்டார் எனவே இவர் ஒரு தேசத் துரோகி என ஆங்கிலேய அரசு பிரகடனப்படுத்தியது தாம் ராஜசிங்கனின் குடும்ப உறவுமுறை க்காரன் எனக்கூறி கண்டி தலதா மாளிகையில் வாசித்துள்ளார். வெளிநாட்டவரின் ஆட்சிக்கு எதிராகசெயற்படும்போது அதற்குத் தேவையான பொதுமக்களின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெறுவது முக்கியமானது என்பதை அவர் விளங்கிக் கொண்டார். ஆங்கிலேயரால் அறறவிடப்பட்ட நியாயமற்ற வரிகளை இரத்துச் செய்து கொள்ள வேண்டிய தேவை சிங்கள மக்களுக்கு இருந்தது மேலும் ஆங்கில ஆட்சியாளரை இலங்கையிலிருந்து துரத்துவதற்கு சிங்கள மக்கள் ஒன்று திரள வேண்டும் என்பதையும் அவர் விளங்கி இருந்தார். அப்போராட்டத்தில் தலைவராக கொங்காலே கொட பண்டா செயற்பட்டார் 1848 ஜூலை மாதம் 30ஆம் திகதியன்று பெருந்தொகையானோரின் விருப்பமும் விகாராதிபதி ஆகிய வணக்கத்துக்குரிய கிரானேகம இந்திரஜோதி அவர்களின் அனுசரணையும் கிடைத்தது கௌரவ மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் கொங்காலே கொட பண்டா ஸ்ரீ விக்ரம் சர்வ சித்தி எனும் பெயரில் மூன்று பிரதேசங்களுக்கும் அரசனாக முடிசூட்டி அபிஷேகம் செய்யப்பட்டார் கண்டி பரந்துகலை மற்றும் மாத்தளை நகரங்களை வெற்றி கொண்ட நிலையில் சிங்களப் போராட்ட தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட விளைவுகள் மற்றும் சிங்களவரின் போர் ஆயுத சக்தி குறைபாடு போன்றவை காரணமாக போராட்டம் களை இழந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள் ஒளிந்திருந்த கொங்காலே கொட பண்டா வை 1848 நவம்பர் பதினான்காம் திகதி யுத்த நீதிமன்றத்தில் நிறுத்தினர் அங்கு வெளியிட்ட குற்ற ஒப்புதல் வழக்கு காரணமாக மரண தண்டனை தளர்த்தப்பட்டு 100 கசையடிகள் ஆக மாற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டது கொங்காலே கொட பண்டா 1849 சனவரி முதலாம் திகதி உயிர் நீத்தார் கண்டியில் அபிஷேகம் செய்யப்பட்ட மன்னன் எனவும் 1848 இல் விடுதலைப் போராட்டத்தை ஒழுங்கு செய்து பொதுமக்களின் ஊடாக அதற்கு ஊட்டி வலுவூட்டி நடத்திய ஒரு வீரர் எனவும் இலங்கை வரலாற்றில் இவரது பெயர் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக