google-site-verification=FJPfEEIf9XsbSqQQ_mcBzkBG4ft8J0yH0KbnWakXpi8 அறிகை: இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னம் சிகிரியா.

நவீனம் நோக்கிய ஆரம்பக்கல்விக்கு அறிகையுடன் இணைந்திருங்கள்.**புலமைப்பரிசில் பரீட்சைக்கான நிகழ்நிலை வழிப்படுத்தல்கள்.** தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து.

சனி, 9 மே, 2020

இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னம் சிகிரியா.


இலங்கையின் மத்திய பகுதியில் கண்டி நகருக்கு 72 km வட கிழக்கே மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது.கி.பி 5 ம் நூற்றாண்டில் காசியப்பன் எனும் மன்னன் (கி.பி 473-491) இக் குன்றின் மீது மிகப் பெரிய அரண்மனையை கட்டி இதனை தன் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்தான்.
                   இச் சிகிரியா குகையினுள் சுவரோவியங்கள் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்னும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றது. இந்த ஒவியங்களில் காணப்படும் பெண்களை தேவதைகள் என சிலரும், காசியப்பனின் மனைவிகள் என சிலரும் குறிப்பிடுகிறார்கள். சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர்க்கொத்தை ஏந்தியவாறும், சிலர் மேலாடை இன்றியும், சிலர் மேலாடையுடனும், தனித்தும், கூட்டமாகவும் இருக்குமாறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இதன் வடிவமைப்பானது தூரத்தில் இருந்து நோக்கும் பொழுது சிங்கம் ஒன்று படுத்திருப்பது போல காட்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளமையானது, பார்ப்பவர்களை பிரம்மிப்பூட்டுகிறது. இதனை 'சிங்க குகை' என்றும் அழைக்கும் வழக்கம் மக்களிடையே காணப்படுகின்றது.

மலைக்குன்றின் வெளிப்பகுதியில் மட்டுமல்லாது, உட்கட்டமைப்புக்களும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். உட்பகுதியில் காணப்படுகின்ற செதுக்கல் மற்றும் சித்திர வேலைப்பாடுகள் பார்வையாளர்களை வசீகரிக்கும் விதத்தில் உள்ளன. பிரதானமாக சுவரோவியங்கள் தனி இடத்தை பிடிக்கின்றன. இவ்வோவியங்கள் 'அஜந்தா' வகையை சார்ந்தனவாகவும், இன்று வரை மங்காத நிலையில் காணப்படுகின்றமையும் அக்கால கலையின் திறனை பறைசாட்டுகின்றன.

இத்தகைய கலையம்சமும் சிறப்பம்சமும் பொருந்திய சிகிரியா மலைக்குன்றினை காண வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. முக்கியமாக சென்று பார்வையிடும் இடங்களில் சிகிரியாவும் பிரதான இடத்தைப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக