கலாநிதி ஆனந்தக்குமாரசுவாமி அவர்கள் 1877இல் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பிறந்தவர்.
500இற்கும் மேற்பட்ட தரமான நூல்களை வெளியிட்டுள்ளார்.
ஆங்கிலம், தமிழ், பிரஞ்ச், ஜெர்மன், லத்தின், கிரேக்கம், சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
சிறந்த சட்ட அறிஞராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார்.
இந்து சமய நூல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார்.
பௌத்த சமய நூல்களை பாளி மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார்.
இலங்கை நாடு உலகுக்கு அளித்த சிறந்த தத்துவ ஞானியாக இவர் விளங்குகின்றார்.
இவரது ஆக்கங்கள் கையெழுத்து பிரதிகள் அமெரிக்காவின் போஸ்டன் லலித கலைகள் அரும்பொருட்காட்சிச் சாலையில் இன்றும் உள்ளன.
இவர் 1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் காலமானர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக